டைட் ஜீன்ஸா இதப்படிங்க முதல்ல

jeans

ஆஸ்திரேலியாவில் உடலையொட்டிய ஜீன்ஸை அணிந்திருந்த பெண்ணுக்கு திடீரென ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது. முற்றிலும் முடங்கிய நிலையிலிருந்த அவருக்கு பலதரப்பட்ட சிகிச்சைக்கு பின்னரே இயல்பு நிலை திரும்பியது.பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை கட்டுரையாக ஆஸ்திரேலிய நரம்பியல் மற்றும் மனநலம் சார்ந்த பத்திரிகை இதனை வெளியிட்டுள்ளது.

ஸ்கின்னி ஜீன்ஸ் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அணியப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் அவர்களில் ஒருவர் தான். அவரது ஜீன்ஸ் மிகவும் இறுக்கமாக இருந்துள்ளது. அதனை பொருட்படுத்தாத அவர், வழக்கம்போல வெளியே சென்றுள்ளார்.சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அவரால் தனது கால்களை தூக்கவே முடியவில்லை. சிறிது நேரத்தில் உணர்ச்சியை இழந்து கீழே விழுந்த அவரால், மீண்டும் எழ முடியவே இல்லை. இரவு நேரம் என்பதால் சாலையில் யாரிடமும் உதவியும் கோர முடியவில்லை. கெண்டைத் தசைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு ‘டைட்’ ஜீன்ஸை அந்தப் பெண் அணிந்திருந்தார் என்பதே இதற்குக் காரணம்.

சாலையில் சென்று கொண்டிருந்த டாக்ஸியை தவழ்ந்த நிலையிலேயே நிறுத்தி பின்னர் அருகே இருந்த மருத்துவமனையை அடைந்திருக்கிறார்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் தாமஸ் டிம்பர் கூறும்போது, “அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவரது இரண்டு கால்களின் கெண்டைத் தசைகள் கடுமையான வீக்கத்துடன் இருந்தது.

எப்படி கூறுவது என்றால், எங்களால் அவரது ஜீன்ஸை கிழித்தே அகற்ற முடிந்தது. முட்டிக்கு கீழே அவரது கால்களில் உணர்ச்சியே இல்லை.ரத்தஓட்டத்தை சீரமைக்க தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அவரது நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.உடலையொட்டிய ஜீன்ஸே இதற்கு காரணம். கால்களில் ரத்தஓட்டம் தடைப்பட்டதால் தசைகள் இறுகி, கால்களின் நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தம் தான் இதற்கு காரணம். ஸ்கின்னி ஜீன்ஸை அணியும் பெண்கள் நீண்ட நேரம் உட்காரக் கூடாது. நாள்பட்ட நிலையில் இவ்வாறான பாதிப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவில் நேர்ந்த இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, ஸ்கின்னி ஜீன்ஸை அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.