ஹெல்மட் அணிந்தும் பயனில்லை

7880865475958504752371527402370160952564587398hjccs12lotusblue1401618779140908402014161351011425404697142834572014291697861433964902

ஹெல்மெட் ( தலை கவசம் ) அணிவது பாதுகாப்புதான்……ஆனால்…?

இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில் உயிர் இழப்பவர்கள் அதிகமானோர் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தான்…அதேபோல…சாலைவிபத்தில் படுகாயம் அடைபவர்களும் தமிழ் நாட்டில் தான்….ஆக…தலைகவசம் அணிவதால் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்…
ஆனால் படுகாயத்தில் இருந்தோ…காயங்களில் இருந்தோ அல்ல….

சென்னை / கோவை / மற்றும் சில நகரங்கள் தவிர….ஏனைய நகராட்சிகளில்…பேரூராட்சிகளில்…நால்வழிச் சாலையில்…புறநகர் சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் பெரும்பாலும் சாலை விதிகளை பின்பற்ற மறுப்பதின் விளைவாகவே ஏற்படுகின்றன….

குறிப்பாக…இரவுகளில் கண்ணை கூசச் செய்யும் ஒளி வெள்ளமும்….
காதுகளை செவிடாக்கும் ஒலிப்பானும் அதிக விபத்துக்களை ஏற்படுத்துகின்றன….வாகன போக்குவரத்து கூடுதலாக இருக்கும் பகுதிகளில் / சாலைகளில் இரு சக்கர வண்டிகளில் கியரை குறைப்பதற்குப் பதில்….டாப் கியரில் இருந்து கொண்டே…காதுகளை செவிடாக்கும் ஹாரன்களை அடித்துக் கொண்டு செல்வதும்…பல விபத்திற்கு காரணம்….

வேகக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்…
ஒலிப்பான்களின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்…

கண்ணுகளைiகுருடாக்கும் ஒளிவெள்ளத்தை கட்டுப்படுத்த வேண்டும்….
வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்…..

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது காசுகளை வாங்கிக் கொண்டு……தப்பிக்க விடுதல்….கால இடைவெளிகளில் அணைத்து சாலைகளையும் முழு பராமரிப்பு செய்தல்….

பாதசாரிகளுக்கு…நடைபாதை சாலை அணைத்து முக்கிய சாலைகளிலும் உருவாக்குதல்…
இவை எல்லாவற்றுக்கும் மேலாக போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்த வேண்டும்…

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் எல்லாம் சரி செய்தாகி விட்டாச்சு என்று போக்குவரத்து துறையும் / பொதுப்பணித் துறையும் / அரசும் ஒதுங்கிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்…மேலும் சல்லிசாக கிடைக்கும் என ரோட்டோரத்தில் கிடைக்கும் ஹெல்மெட்களை வாங்கிவிட்டு கவசம் என நினைப்பது வேடிக்கை.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.