கசப்பு கத்திரிக்காய்

bed time story

சிறிய கிராமம் ஒன்றில் நண்பர்கள் கண்ணன், கார்த்திகேயன் இருவர்கள் வாழ்ந்தார்கள். இருவரும் பால்யவயதிலிருந்து நண்பர்கள்.  ஆனால் இன்று கண்ணன் காவல்துறையில் தலைமைக் காவலர் ஆனால் கார்த்திகேயனும் அதே காவல்நிலையத்தில் தான் இருந்தான் கைதியாக.இவர்களின் வாழ்க்கை சிறு வயதில் தீர்மானிக்கப்பட்டது. அன்று நடந்த சம்பவம் தான் ஒருவன் காவலராகவும் மற்றொருவன் கைதியாகவும் மாற்றியது.இருவரும் சிறுவயதில் வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது கார்த்திகேயன் கண்ணனிடம் வா காட்டுக்கு போகலாம் என்று கூறினான். இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் வயல் பகுதிகளுக்குச் சென்றனர்.

வயல் பகுதிகளின் கிராமத்தில் வீட்டுக்குத்தேவையான காய்கள் மற்றும் பழங்களை  பெற சொந்தமாக தோட்டம் வைத்திருப்பார்கள். அதில் தேவையான காய்கறிகளைப் பெற்று பயன்படுத்துவார்கள். அவ்வாறு ஒரு தோட்டத்தில் காய்கனிகள் நிறைந்திருந்தன.கண்ணன் இவற்றைக் கவனிக்கவில்லை அவனின் கவனம் விளையாட்டில் மட்டும் இருந்தது.  ஆனால் கார்த்திகேயன் காட்டுக்கு வந்ததே இந்த காய்கறிகளை பறித்துச்செல்லத்தான்.

கண்ணனிடம் ”வா…நாம் அந்த தோட்டத்திற்கு போய் காய்கனிகளைப் பறித்துக் கொண்டு வரலாம்”…என கூறினான். ஆனால் கண்ணனோ…”ஆ..இது தவறு  சரியாக வராது…திருடக்கூடாது தவறு” என்றான்.. ஆனால் கார்த்திகேயனோ ”நாம் வேறு வீட்டில் சொல்லாமல் வந்து விட்டோம் நம்மை வீட்டில் திட்டாமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதைச் செய் இல்லையேல் வீட்டில் நமக்கு இன்று தீபாவளிதான்” என்று பயமுறுத்தி திருடவைத்தான்.

இருவரும் காய்கறிகளைத் திருடிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.  இருவருக்கும் கத்திரிக்காய் என்றால் விருப்பம். அதனால்  அதிகமாக கத்திரிக்காயை திருடிவந்து வீட்டில் கொடுத்துவிட்டு இருவரும் தப்பித்து விட்டோம் என்று நினைத்தனர்.அன்று இருவரது வீட்டிலும் கத்திரிக்காய் கறிசமையல் கார்த்திகேயனது வீட்டில் அவனது அம்மா நல்ல மணமாகவும் ருசியாகவும் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் தினமும் இதுபோல் செய்தால் நான் உன்னை ஏன் திட்டுகின்றேன் என அறிவுரை வேறு வழங்கினார்.

கண்ணன் வீட்டிலும் கத்திரிக்காய் சமையல்தான் ஆனால் அவனது அம்மா வேப்ப எண்ணெய்யை ஊற்றி கறிசமைத்தார். அதை அவன் சாப்பிடச்சொல்லி அருகில் உட்கார்ந்தார். அவன் சாப்பிட வாயில் வைத்தபோது அழுதேவிட்டான். அப்போது அம்மா ”திருடிய காய்கறி சுவைக்காது மகனே இப்படித்தான் கசக்கும்” என்று கூறிய வார்த்தைகள் அவனை மாற்றியது, தவறை உணர்ந்தான் திருந்தினான்.காலங்கள் கடந்தன. அன்றிலிருந்து கார்த்திகேயனின் நட்பை விட்டுவிட்டான் கண்ணன்.  கண்ணன் நன்றாக படித்து காவலராகிவிட்டான்.  பணிநியமனமும் சொந்த ஊருக்கு கிடைத்தபோதுதான் எதேச்சையாக கார்த்திகேயனை காண நேரிட்டது. கார்த்திகேயன் நன்றாகப்படிக்காமல் வளர வளர அவனின் திருட்டுக்குற்றங்களும் பெரிதாக வளர்ந்து வந்திருக்கின்றது. ஒரு வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கார்த்திகேயனை கைது செய்து வைத்திருந்தனர்.

கண்ணன் அவனது பால்ய நண்பனை கைதியாக காணும் நிலைமை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான்.  அதே சமயம் அன்று அவன் வீட்டில் அம்மா செய்த செயலைச் சொன்னான்.  இப்போது கார்த்திகேயன் அழுதான் அவனது அம்மாவை நினைத்து.  அவனது அம்மா அவனைப்பார்க்க வந்தார்.  அப்போது அவரை அருகே கூப்பிட்டான்.  அம்மாவிடம் அழுதான் என் வாழ்க்கை இவ்வாறு மாற நீயும் ஒரு காரணமாகிவிட்டாயே என்று….பிள்ளை நல்லவராவதும் கெட்டவராவதும் பெற்றவளது வளர்ப்பிலே.

Leave a Reply

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.