ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி

images (18)

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் வரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற வகை செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த மாதம் 22-ம் தேதி கடிதம் எழுதியதையும் மோடிக்கு ஜெயலலிதா நினைவூட்டியுள்ளார். அதில் பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக அவசரச்சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை காரணமாக தமிழ்நாட்டில் வரும் பொங்கல் திருநாளில் எவ்வித தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.