ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்

M_Id_426903_TN_CM_Jayalalitha-624x378

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மேல் முறையீட்டு மனு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

சொதுக்கு குவிப்பு குற்றச்சாட்டு வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. அப்போது, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஃபிப்ரவரி 2ஆம் தேதி முதல் நடக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு முன்பாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள், வழக்குத் தொடர்ந்திருக்கும் கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தெரிவிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை தினமும் நடத்துவது குறித்து, அப்போது உள்ள வழக்குகளின் நிலவரத்தைப் பொறுத்து முடிவுசெய்யப்படுமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.