வாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது

front-1393846082939.flat

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்த வாட்ஸ் ஆப் குருப் அட்மின் மற்றும் அதன் உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உ.பி மாநிலம் முசாபர்நகரில் உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்தவர் பரம் சைனி. இவர் வாட்ஸ் ஆப் குருப் ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்.

இவரது குழுவில் உறுப்பினராக இருப்பவர் தீபக். நேற்று முன்தினம் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றி ஆட்சேபகரமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்லாம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர். அதன்பின், பரம் சைனி மற்றும் தீபக் மீது பிரிவு 153 (இரு பிரிவுகளுக்கு இடையே மோதல் உண்டாக்குதல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.