இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

000_Del6195706a--621x414

வங்கித்துறையில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் ஊதிய உயர்வு பணி ஒப்பந்தம் போடப்பட்டது. இதில், ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ இந்தியாவின் கிளை வங்கிகளான ‘ஸ்டேட் பாங்க் ஆப்’ திருவாங்கூர், மைசூர், பாட்டியாலா, ஐதராபாத், பிகானெர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் தன்னிச்சையாக ஒப்பந்ததை மதிக்காமல் மீறி செயல்படுகிறது.

மத்திய தொழிலாளர் ஆணையர் வங்கி நிர்வாகத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ‘ஒப்பந்த மீறலை கைவிட வேண்டும்’ கேட்டுக்கொண்டார். எனினும் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இந்த 5 வங்கி களும், பணி ஒப்பந்தத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் இன்று வங்கி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட னர். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அதிகாரிகள் மட்டத்தில் இன்று பணிக்கு வந்திருந்தனர். இதனால் வங்கிகள் வழக்கம் போல திறந்திருந்தன. ஊழியர் கள் பணிக்கு செல்லாததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் வங்கிகளில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, உள்ளிட்ட பணி கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசோலைகளும் முடங்கி கிடந்தன. இதனால் வாடிக் கையாளர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தக நிறு வனங்களை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட னர்.

வேலை நிறுத்தத்தால் இன்று வங்கிகள் செயல் படாத நிலையில், நாளை மாதத்தின் 2-வது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகிவிடுகிறது. தமிழக அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம், வங்கிகளில் செலுத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எம். கார்டு வைத்திராத பெரும்பாலானவர்கள் வங்கிகளுக்கு நேரில் சென்றே பணம் எடுத்து வருகிறார்கள். அதுபோன்றவர்கள் வெள்ள நிவாரண தொகையை வங்கி களில் இருந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இனி வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை)தான் வங்கிகள் திறக்கப்படும். வெள்ள நிவாரணத்தை பெறுவதற்காக கடந்த 2 நாட்களாகவே வங்களில் கூட்டம் அலைமோதியது. திங்கட்கிழமை இந்த கூட்டம் வங்கிகளில் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.