தொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்

Wikipedia_BodyFat

வயிற்றில் கெட்ட கொழுப்புகள் ஒன்று சேர சேர அடிவயிற்றில் சதைகள் வளர்ந்து தொப்பையாக மாறிவிடுகின்றது.  இந்த தொப்பையை குறைக்க எத்தனை பயிற்சிகள், மருந்துகள், கிரீன் டீக்கள் இன்னும் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் உபயோகித்து களைத்து போனது தான் மிச்சம். ஒன்றும் முன்னேற்றமில்லை என்று சளித்துப்போகின்றவள் இதை மேலும் படியுங்கள்.

முதலில் தொப்பை எப்படி வந்தது, எந்த முறையில் உருவானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின் அதற்கேற்ற முறையில் பயிற்சி மற்றும் உணவுகட்டுப்பாடு கொண்டு தொப்பையை குறைத்துவிடலாம்.

தொப்பை உருவாக நிறைய காரணங்கள் உண்டு.  அதில் மிக முக்கியமானது கொழுப்பு தான்.  இந்த கொழுப்பு வயிற்றில் சேர சேர தொப்பை வந்துவிடும்.  நல்ல கொழுப்பால் தொப்பை வராது, எண்ணெய் பொருட்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளும் கெட்ட கொழுப்புகள் உருவாகி தசையை பெருகச் செய்து தொப்பையை உருவாக்குகின்றது.

இன்னொரு வகையில் வேலையைப்பொறுத்து தொப்பையானது வளர்ந்துவிடும். சிலரது உடல் உழைக்கும் வேலையை கொண்டிருப்பர். சிலர் உட்கார்ந்து இருக்கும் வேலையை செய்வார்கள். இந்த உட்கார்ந்திருக்கும் வேலையில் தான் நோய்கள் எளிதாக வந்துவிடும். உடல் உழைக்கப்படும் போது கொழுப்புகள் கரைந்து விடும். ஆனால் நன்றாக சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தொப்பை எளிதாக வந்துவிடும்.

இவர்களுக்கு கண்டிப்பாக உடற்பயிற்சி வேண்டும்.  தொப்பையை குறைக்கும் போது மனதில் கொள்ள வேண்டியது. எடுத்த உடனே கடினமான ஓட்டம், பட்டினி, விருதம் மற்றும் உடற்பயிற்சி என்று செய்தால் ஒரே நாளில் உடல் வலி எடுத்து வீட்டில் படுத்துவிடுவீர்கள்.  அப்பறம் உடல் இன்னும் ஒரு சுற்று குண்டாகிவிடும்.

படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும்.  உடலை குறைத்தே ஆகவேண்டும். என்று தனக்குள் சூலுரைத்துக்கொண்டு தற்போதைய எடையை குறித்துக்கொண்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது மிதமான சூட்டில் உள்ள குடிநீர் ஒரு சொம்பு, காலையில் எழுந்து இதை தினமும் செய்ய வேண்டும்.

பின் அரைகிலோ மீட்டர் தூரம் காலாற கைவீசி நடக்க வேண்டும். பின்னர் ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஸ்கிப்பிங் கயிறை தாண்ட முடிந்தால் தாண்டலாம்.  ஆனால் பெருத்த தொப்பை உடையவர்கள், முதலில் பயிற்சிகளை செய்வதை விட, வெந்நீர், பழங்கள், மற்றும் கோதுமை உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். படிப்படியாக பயிற்சிகளை செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும் போது தொப்பையை விரைவாக குறைக்க முடியும். அதிகமாக பயிற்சி செய்தால் சீக்கிரம் தொய்வடைந்து விடுவீர்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.