ஈவிகேஎஸ் இளங்கோவன் தயாரித்த அதிமுகவின் ஊழல் புகார் பட்டியல்

images (15)

சென்னை: அதிமுக அரசு மீது ஊழல் புகார் விவர பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டார். 25 ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு அதிமுக அரசு மீது இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரணம் உள்பட பலவற்றில் ஊழல் நடைபெற்றுள்ளது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை, ஆவின் பால் கலப்படம், லேப்டாப், பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை, போக்குவரத்துறை, மின்வாரியம், செய்தித்துறை, நூலகம், மருத்துவத் துறை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பொதுவிநியோகம் திட்டம், பாதாளச் சாக்கடை, நெல் கலப்படம், டாஸ்மாக், பத்திர பதிவுத்துறை, ரியல் எஸ்டேட், கிரானைட் , மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல், வணிக வரித்துறை, ஊழலால் ரத்து செய்யப்பட்ட உடன்குடி திட்டம், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலத் ஒதுக்கியதில் ஊழல் இதுபோன்ற ஊழல்கள் பட்டியலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய இளங்கோவன், அ.தி.மு.க அரசு மீது 25 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை ஆளுநரிடம் ஏற்கனவே அளித்தோம். இந்த ஊழல் பட்டியல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதில் இரண்டு குற்றச்சாட்டுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. ஜெயலலிதா ஆட்சியில், மோடி ஆட்சியில் என்ன ஊழல் நடக்கிறது என்பது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஊழல் புகார்கள் எழுந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.