காஷ்மீர் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மரணம்

Mufti Mohammad

காஷ்மீர் மாநில முதல்- மந்திரியாக முப்தி முகம்மது சயீத்( வயது 79). கடந்த மாதம் 24-ந்தேதி அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி முப்தி முகம்மது சயீது காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லியில்  எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களாக அவரது உடல், மருத்துவ சிகிச்சைகளை ஏற்கவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நேற்றிரவு அவர் நினைவிழந்தார்.இன்று காலை 7.30 மணிக்கு முப்தி முகம்மது சயீத் மரணம் அடைந்தார்.

முப்தி முகம்மது சயீத் உடல் இன்று மதியம் டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஸ்ரீநகரில் அவர் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் படுகிறது. பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெறும். அவர் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி யில், ‘‘முப்தி முகம்மது சயீதின் மரணத்தால் நாட்டிலும், காஷ்மீரிலும் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தனது தலைமை மூலம் அவர் காஷ்மீர் மக்களின் ரணங்களுக்கு சிகிச்சை அளிப்பவராக இருந்தார். நாம் எல்லாரும் அவரை இழந்து விட்டோம்’’ என்று கூறியுள்ளார்.

Mufti Sahab’s demise leaves a huge void in the nation & in J&K, where his exemplary leadership had a major impact on people’s lives. RIP.

  — Narendra Modi (@narendramodi) January 7, 2016

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி,மத்திய மந்திரிராஜ்நாத் சிங்,காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா,ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.