ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு-முதலமைச்சர் அறிவிப்பு

pongal4

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு 100 ரூபாய் பணம், சர்க்கரை, பச்சை அரிசி உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற திருநாளாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு துண்டு, நூறு ரூபாய் பணம் அடங்கிய பரிசு பொருள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பரிசுப் பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.