முட்டையை பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகுமா?

easter-eggs-funny-2

மனிதன் பிரிட்ஜை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தான,  நம் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே நாளில் வாங்கி வந்து,  பிரிட்ஜூக்குள் திணித்து விட்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.  ஒரு வாரத்திற்கு தேவையான குழம்பு, உணவுகளை சமைத்து பிரிட்ஜூக்குள் பாதுகாப்பாக(?) வைத்து விட்டு, தினமும் எடுத்து பயன்படுத்துகின்றார்கள்.

இது தவறுதான் ஆனால் இந்த இன்ஸ்டன்ட் உலகத்தில் எல்லாமே இன்ஸ்டன்ட்டாக மாறிவருகின்றது. அதனால் பிரிட்ஜை பயன்படுத்துவது தான் தர்மம்.  அந்த வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான முட்டைகளை வாங்கி வந்து பிரிட்ஜூக்குள் வைத்து விடுகின்றனர்.  இது மிகவும் தவறு.

ஒரு முட்டையானது தன்னுள் ஒரு கருவை வைத்துள்ளது.  இதற்கு தாய்க்கோழி மூலமோ அல்லது இன்குப்பேட்டர் மூலமோ சீரான வெப்பம் கொடுக்கப்பட்டு கருவளர்கின்றது.  மேலும் அறைவெப்பநிலையில் வைக்கும் போது முட்டையின் கரு வளரவும் இல்லாமல் கெட்டுப்போகமால் சிறிது காலம் 2 வாரங்கள் அல்லது 3 வாரங்கள் வரை இருக்கும்.

இதே முட்டையை பிரிட்ஜில் வைக்கும் போது இந்த முட்டை கெட்டியாகிவிடுகின்றது. கருவும் கெட்டுப்போய்விடுகின்றது.  முட்டை என்பது ஒரு உயிரின் கரு.  உள்ளே உயிரினத்திற்கு தேவையான உணவுகளும் செல்களும் உள்ளது.  இதற்கு மிதமான வெப்பநிலை தேவை.  பிரிட்ஜில் உள்ள குளிர் கருவை உறைய வைத்துவிடும்.  இந்த முட்டையில் தயாரிக்கும் எந்த உணவும் ( கேக் உட்பட) மிருதுவாக இருக்காது.

இந்த காரணத்தால் இனிமேல் முட்டைகளை வாங்கியநாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையேல் முட்டையில் வைரஸ்கள் உருவாகி நம் உடலை தாக்கிவிடும்.  பாத்திரம் நிறைய தண்ணீரில் முட்டையை போடும் போது முட்டை மூழ்காமல் மிதந்தால், அது கூழ் முட்டை,  கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

பிரிட்ஜில் வைப்பதால் முட்டையை பாதுகாக்க முடியாது. அறைவெப்பநிலையிலும் பாதுகாக்க முடியாது.  வேண்டும்போது வாங்கி சீக்கிரத்தில் பயன்படுத்திவிடவும்.  இது உடலுக்கு நல்லது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.