பிணவறையில் இருந்த பெண்ணின் உடலை கடித்துக்குதறிய எலி

rat_bite_fever_

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கஸ்தூரிபா மருத்துவமனையில் வைத்து கடந்த சனிக்கிழமை 68 வயது பெண்மணி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனையின் பிணவறையில் வைத்து இருந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்து இறுதிசடங்கு செய்ய திங்கட்கிழமை பெண்மணியின் உடலை பிணவறைக்கு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது பெண்மணியின் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்து உள்ளது. பிணவறையில் வைத்து எலிகள் அந்த பெண்ணின் உடலை கடித்து உள்ளது. இது குறித்து மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஏகே தேவ் கூறும் போது

திங்களன்று பெண்மணியின் உடலை வெளியே எடுத்தபோது அவரது கழுத்து மற்றும் உடலின் பல பாகங்களிலும் காயங்கள் இருந்தது என கூறினார். பிணவறையில் உடலை எலி கடித்தது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.