தர்மம் வென்றது: டி.ராஜேந்தர் பேட்டி

download (22)

சென்னை: ‘பீப்’ பாடல் விவகாரத்தில் ‘தர்மம் வென்றது’ என நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் நேற்று கூறியதாவது: சிம்புவின் வாழ்க்கையில் இன்று (நேற்று) முக்கிய திருப்பமான நாள். ‘பீப்’ பாடலை தேவையில்லாமல் ஊதி பெரிதாக்கிவிட்டனர்.

யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார். பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நான் கொடுத்த புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் கூறினோம்; தர்மம் வென்றுள்ளது. எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி; குறிப்பாக இறைவனுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.