அக்குள் மற்றும் கம்கட்டு, கழுத்துப்பகுதிகளில் அரிப்பு நீங்க

1280px-Coconut_oil_making_Seychelles

வெயில் காலம் தொடங்கியாயிற்று மாறி மாறி பெய்த மாரிக்காலம் போயாச்சு. அதைத்தொடர்ந்து வந்த குளிர்காலமும் போயாச்சு வெயில் இப்போது தன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.  தினமும் காலையிலேயே வெயில் தாக்கம் ஆரம்பித்து விடுகின்றது.  இதனால் இந்த வெயிலை சமாளிக்க வேண்டும்.

இப்போது வெயிலில் அலைய வேண்டிய வேலையில் இருந்தால், அக்குள் மற்றும் கம்கட்டுப் பகுதிகளில் எரிச்சலுடன் கூடிய அரிப்பு புண்கள் வந்துவிடும்.  இதில் வியர்வை படும்போதெல்லாம் நமக்கு எரிச்சலை தரும். இது வியர்வை ஒரே இடத்தில் குவியும் போது உருவாகும் உப்பு படிமத்தால் தோன்றுகின்றது.  மேலும் நமது இறுக்கமான ஆடைகள் உரசி உரசி மேலும் எரிச்சலை அதிகமாக்கும்.

இந்த பிரச்சினை வராமலிருக்க, பருத்தி இழையால் நெய்த அடைகளை அணியும் போது வியர்வையை உறிஞ்சுக்கொள்ளும்.  இதனால் வியர்வையால் உருவாகும் உப்புபடிமம் தோன்றாது.  அதே சமயம் அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளை அகற்றிவிட வேண்டும்.  வாசனை திரவியம் உடலுக்கு தீங்கானது. இது துணிமேல் மட்டும் தான் படவேண்டும்.  உடல்மேல் பட்டால் அதுவே அரிப்புக்கு காரணமாகும். அதனால் அதை அக்குள் பகுதிகளில் தடவக்கூடாது.

ஒரு வேளை எரிச்சல் வந்து விட்டால் கவலை வேண்டாம் வீட்டுக்கு வந்ததும். தளர்வான ஆடைகளை அணிந்துக்கொண்டு ( ஆண்கள் பனியன்கள் போட்டுக்கொள்ளலாம் ) தேங்காய் எண்ணெயை தொட்டு எரிச்சலின் மீது தடவவும்.  இரவு தூங்கும் போது எண்ணெயைத்தொட்டு தடவிவிட்டால் உடனே எரிச்சல் சரியாகிவிடும். அடுத்தநாளும் இதே போல் செய்து கொண்டு வேலைக்கு செல்லவும்.

இதைவிட்டு, ஆங்கில மருத்துவத்தி்ல் உள்ள கிரீம்கள் மற்றும் கலிம்புகளை தடவி காத்திருக்கவேண்டாம்.  தே.எண்ணெய் சிறந்த நிவாரணி.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.