கிழக்கிந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் பலி

வடகிழக்கு இந்தியா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் பூட்டானை உள்ளடங்கிய பகுதிகளில் இன்று அதிகாலையில் 6.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவில் அதிகாலை 4.35 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பினால், குறைந்தது 3 பேர் பலியாகியிருப்பதாகவும் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சைபுல் ஹூசைன் ரூபெல்(22) மற்றும் ராஜஷாகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் கலிலுர் ரகுமான், ஆகிய இருவரும் நில நடுக்க அதிர்வு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் படி காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.