விஜயகாந்த் பத்திரிக்கையாளரை காரித்துப்பியதை நியாயப்படுத்தும் மனுஷிய புத்திரன்

kadhaisolli_8_manus_1

சென்னையில் கேள்வி கேட்ட செய்தியாளரைக் காரி துப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திமுக கூட்டத்தில் மனுஷிய புத்திரன் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனுஷ்ய புத்திரன் பேசுகையில், டெய்லி கலைஞரைப் பார்த்து கேள்வி கேக்குறீல்ல.. மத்த கட்சித் தலைவர்கள் கிட்ட கேள்வி கேக்குறீல்ல.. டெய்லி வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்கிறீல்ல.. உங்க வீட்ல என்ன பிரச்சினைன்னை கேக்குறீல்ல.. ஏதாவது பிரச்சினைல மாட்டி விட முடியாதான்னு பார்த்தீல்ல.. தளபதி வரும்போது மைக்கை நீட்டினீல்ல.. போய் நில்லு போயஸ் கார்டன்ல.. அந்தம்மாவும் டெய்லி வெளில வருதுல்ல.. நாலரை வருஷமாச்சு.. எத்தனை தடவை மைக்கை நீட்டிருப்ப..

நாம துப்ப நினைச்சோம்.. ஒரு ஆள் செய்துட்டார்.. காரி துப்பத்தான செய்வாங்க.. அதான் விஜயகாந்த் காரித்துப்பினார். நம்ம எல்லாம் துப்பணும்னு நினைச்சோம். ஒரு ஆளு அத பண்ணிட்டார். பாராட்ட வேண்டிய விசயம். இதுக்கு மேல தமிழக மக்கள் இதே ஆட்சியை கொண்டு வந்தா தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொள்வதற்கு சமம்’’ என்று ஆவேசமாக கூறினார்.

இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டக்குரலும் எழுந்தது. இந்நிலையில் மனுஷ்யபுத்திரன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர், ‘’ பத்திரிகையாளர்கள் மேல் விஜயகாந்த் முன்வைத்த விமர்சனம் குறித்து நான் பேசியதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நான் ஊடகங்களின் பாரபட்சமான அணுகுமுறையை சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கமே தவிர எந்தவகையிலும் ஊடகங்களை அவமதிப்பது என் நோக்கமல்ல. மேலும் கருத்து சுதந்திரத்திற்காகவும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து வாதாடியும் போராடியும் வருபவன் என்ற முறையிலும் நானே ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலும் ஒரு போதும் ஊடகங்களை அவமதிக்க விரும்பமாட்டேன். என் கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.