கர்ப்பப்பைக்கு உதவும் கரிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை என்ற பெயரே சிலருக்கு பிடிக்காது உணவில் அதை மட்டும் தேடிப்பிடித்து எடுத்து தனியே வைத்து விட்டுத்தான் சாப்பிடுவார்கள்.  ஏனென்றால் அது அவர்களுக்கு பிடிக்காத ஒன்றாம்.  ஆனால் நீங்கள் எதை வேண்டாம் என்று சொல்கிறீர்களோ அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரியுமா.

கறிவேப்பிலை என்பது ஒரு இரும்புச்சத்து வாய்ந்த ஒரு தாவரம்.  இதில் மனித உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.  இந்த கறிவேப்பிலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

கர்ப்பப்பையில் கட்டி மற்றும் தீராத உதிரப்போக்கு போன்ற பிரச்சினைகளால் உடலில் உள்ள இரத்தம் வெளியேறி இரத்த சோகை வந்து அன்னைமார்கள் அவதியுறுவார்கள்.  இவர்கள் பச்சை கறிவேப்பிலை மிக்சியில் அரைத்து சாறாக்கி தேன் கலந்து சாப்பிடுங்கள் தினமும் உண்டு வாருங்கள் கட்டி மற்றும் உதிரப்போக்கு நின்றுவிடும்.

முடிப்பிரச்சினைகள் தீருவதற்கு கறிவேப்பிலையை நன்றாக அரைத்து அதை முடிக்கால்கள் வேர்பட நன்றாக தேய்த்து விடவும்.  அரை மணிநேரம் நன்றாக உலர்ந்த பின்பு ஷாம்பு தவிர்த்து சீயக்காய் போட்டு தலை அலசவும். முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

செரிமானம், வயிறு உப்புசம் போன்றவைகள் இருக்கும் போது இந்த சாற்றைக்குடித்தால் சரியாகிவிடும்.

பெண்களில் பேறுகாலத்தில் சோர்வு, களைப்பு நீங்க இந்த கறிவேப்பிலையை சாறாக்கியோ அல்லது ஊறுகாய் தயாரித்தோ சாப்பிடுதல் நல்லது.

இதே சாறு சிறுநீரகத்தில் உள்ள கற்கள் மற்றும் உப்பெரிச்சலை தவிர்க்கும். கறிவேப்பிலை அரைத்து சுடுநீரில் போட்டு குடித்தால் இன்னும் நல்லது.

இன்னொன்று கறிவேப்பிலை போல அதன் குச்சும் மருத்துவகுணம் வாய்ந்தது பல் துலக்க இந்த கறிவேப்பிலைக்குச்சை பயன்படுத்தலாம்.  இதனால் பல்லில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

சரி இவ்வளவு நல்ல கறிவேப்பிலையை குழம்பில் சேர்த்தால் குழந்தைகளிடம் முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள் கறிவேப்பிலையை காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு குழம்பில் கலந்துவிடுங்கள்.  இப்போது உங்கள் குழந்தைகள் எப்படி கறிவேப்பிலையை தவர்க்க முடியும்.?

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.