முளைக்கட்டிய தானியத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

25-1424839812-1-sprouts-green-gram-dal-whole

நாம் இந்த முளைக்கட்டிய தானியம் என்ற பெயரை பலமுறை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் அதை சாப்பிட்டிருக்கமாட்டோம்.  இந்த முளைக்கட்டிய தானியங்கள் உடலுக்கு மிகுந்த நல்லது தரக்கூடியது.  தினமும் இதை சாப்பிட்டு வந்தால் போதும் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.

இந்த முளைக்கட்டிய தானியத்தை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். குழந்தைக்கு தினமும் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.  பச்சையாக உள்ள இந்த தானியங்கள் நேரடியாக உடலுக்கு சென்று செரிமானமாக கூடியது.

குடலை சுத்தம் செய்துவிடுவதால்.  குடல் இந்த தானியத்தில் உள்ள சத்துக்களை உறிஞ்சிக்கொள்கின்றது.  முளைக்கட்டிய தானியத்தினை எப்படி சாப்பிடுவது என்று பார்ப்போம்.

இந்த முளைக்கட்டிய தானியத்திற்கு பாசிப்பயறு ஏற்றது.  சோளம், கேழ்வரகு, கொண்டைக்கடலை, கொள்ளு ஆகிய எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  எளிதாக கிடைப்பது பாசிப்பயறுதான்.  பாசிப்பயறு வாங்கும் போது ஆஃபிஸ் ரகம் வாங்காமல் சாதா ரகம் வாங்க வேண்டும். இது சிறியதாக இருக்கும்.

ஒரே அடியாக ஒரு கிலோ வாங்காமல் அரை அரை கிலோவாக வாங்கிக்கொள்ளலாம். இல்லையேல் வெகுநாட்கள் ஆவதால் புழுக்கள் வந்துவிடும்.  தினமும் ஒரு கை ( 50 கிராம் எடுத்துக்கொண்டால் போதுமானது) எடுத்து காலையில் தண்ணீரில் ஊற வைத்துவிடவும்.

இரவு உறங்குவதற்கு முன்னர் நூல் துணியை சிறிதாக கைக்குட்டை அளவு கிழித்து அதில் ஊறிய பாசிப்பருப்பை போட்டு முடிச்சுபோட்டு கட்டவும்.  பின் அந்த துணியை நீரில் நனைத்துவிட்டு ஜன்னல் ஓரம் வைத்துவிடவும்.

அடுத்தநாள் காலையில் எழுந்து பிரித்துப்பார்த்தால் முளைவிட்டு வளர ஆரம்பிக்கும். இது முளைக்கட்டிய தானியம்.  இதை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இல்லையேல் பால் ஒரு டம்ளர் உடன் சாப்பிடலாம்.  ஆனால் இதை சாப்பிட்டபின் அரை மணிநேரம் கழித்துதான் தேநீர் அல்லது மற்ற உணவுகள் அருந்த வேண்டும்.

தினமும் இதை பழக்கிவிடுங்கள்.  ஒரே மாதத்தில் கிடைக்கும் நன்மைகள்.

1. தேக புஷ்டியாகும்.

2. எலும்புகள் வளர்ச்சியுறும்.

3. குழந்தைகளில் அறிவு வளர்ச்சி பெறும்.

4. ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை என்பது கிடையாது.

5. முடி, நகம், பற்கள் என்று எல்லாம் கழிவுப் பொருள் அதிகமாகி வளர ஆரம்பிக்கும்.

6. தாது பலம் உடலுக்கு கிடைக்கும்.

தினமும் குழந்தைகளுக்கு தரும் ஊட்டச்சத்து பானங்களை விட இந்த பாசிப்பயறு விலை குறைவு என்பதோடு இயற்கையின் பரிசுத்தமான நமது படைப்பு.  அதனால் இதை தினமும் உங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ளவும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.