ஆட்கள் இல்லாத வீட்டில் கேஸ் வெடிப்பு

03janersrm6_txt_ER_1320472e

வீட்டில் ஆட்கள் இல்லாதபோது சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு சேதம் அடைந்தன. நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி அபிசால் (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக அபிசாலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் வீட்டை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 1 மணியளவில் அபிசால் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்றனர்.

அபிசால் வீட்டின் சமையல் அறையின் ஒரு பக்கம் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. மேற்கூரையும் சேதம் அடைந்தது. பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் மற்றும் பாத்திரங்கள் நொறுங்கின. இதுபற்றி அறிந்ததும் அபிசால் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

2 சிலிண்டர்கள் உண்டு. சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரை தவிர, கூடுதல் சிலிண்டரை பிரிட்ஜ் அருகே வைத்திருந்தார். அந்த சிலிண்டர் தான் வெடித்து உள்ளது. சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் பற்றி தெரியவில்லை. சீல் உடைக்காத சிலிண்டர் வெடித்து சிதறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.