ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

download (20)

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு அண்மைக்காலமாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இன்றும் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.