காஷ்மீர் சுரங்கப்பாதையில் தீ விபத்து

201601011244564914_Ten-people-charred-to-death-in-Ramban-in-Jammu-and-Kashmir_SECVPF

காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டம் சந்தர்கோடே என்ற இடத்தில் மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நள்ளிரவிலும் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.இன்று அதிகாலை 1 மணியளவில் திடீரென்று சுரங்கப் பாதையில் தீ விபத்தில் ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் செல்லும் மின்சார வயரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது.

தீ மளமளவென்று வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதில் 10 பேர் கருகி பலியானார்கள். தகவல் கிடைத்ததும் போலீஸ் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.