துபாயில் 63 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து

reuters_nocredit

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

63 அடுக்கு மாடிகள் கொண்ட ஆந்த ஆடம்பர கட்டிடத்தில் பிரம்மாண்ட ஹோட்டல்களும் குடியிருப்புகளும் உள்ளன.

நள்ளிரவு துபாயில் புத்தாண்டு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின. கொண்டாட்டத்துக்காக சுமார் 1.6 டன் எடைகொண்ட வானவேடிக்கைகள் 7 நிமிடங்கள் வெடிக்கும் வித்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புர்ஜ் கலீஃபா கட்டிடத்தைச் சுற்றிலும் 400,000 எல்இடி விளக்குகளும் பொறுத்தப்பட்டிருந்தன.

வானுயர்ந்த அந்த கட்டிடத்தில் பல ஆயிரக்கணக்கானோர் இருந்தனர். வானவேடிக்கை நிகழ்ச்சிகள் தொடங்கியதும் திடீரென அங்கு பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. உடனடியாக கட்டிடத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அடுத்ததாக பக்கத்தில் இருந்த குடியிருப்புக்கும் தீ பரவியது.

தீயை கட்டுப்படுத்த உடனடியாக 4 சிறப்பு மீட்புப் படைகள் விரைந்தன. முதற்கட்டமாக கட்டிடத்தின் 20வது தளத்தில் உள்ள ‘தி அட்ரஸ்’ ஹோட்டலில் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=x3E3dgWRCYg

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.