இஞ்சியை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம்

download (7)

காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, ராத்திரி கடுக்காய் என்பார்கள்.  இந்த இஞ்சியின் நற்குணம் அதிகம்தான் ஆனால் அதன்காரம் வாயில் வைக்கமுடியாததால் அதை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தள்ளி வைத்து ரசிப்பார்கள்.  ஆனால் இந்த இஞ்சியை நம் உணவோடு பட்டுப்படாமல் சேர்ப்பதற்கு நிறைய வழிகள் உண்டு.

இஞ்சியை தினமும் சேர்ப்பதால் சளி, ஆஸ்துமா, அஜீரணம், மலச்சிக்கல், வறட்டு இருமல், ஜலதோஷத்தால் உண்டான பாதிப்புகள், பித்தம் ஆகிய அனைத்தும் தீர்ந்துவிடும். ஆனால் கர்ப்பிணிகள், புதிதாக திருமணமாகி கர்ப்பம் தரித்தவர்கள், இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்கவேண்டாம்.

1. தினமும் காலையில் தேநீர் வைக்கும் போது பாலுடன் ஒரு சிறு துண்டு இஞ்சியை நன்றாக நசுக்கி பாலில் போடவும்.  பால் கொதித்தவுடன் தேநீர் தயாரித்து வடிகட்டும்போது இஞ்சியின் சக்கையும் வெளிவந்துவிடும்.  ஆனால் சாறு முழுவதும் இறங்கி நல்ல ருசியாகவும் உடலுக்கு நன்மையாகவும் இருக்கும்.

2. குழம்பில் தினமும் இஞ்சியை நசுக்கிசேர்த்துக்கொள்ளலாம்.

3. குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலில் இஞ்சியை நசுக்கி சாறு பிழந்து விடலாம்.

4. மறக்காமல் வீட்டில் இஞ்சி மிட்டாய்களை வாங்கி வைத்துவிட்டால் தினமும் சாப்பாட்டுக்கு பின் ஒரு மிட்டாய் சாப்பிட்டால் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இப்படி தினமும் இஞ்சி அல்லது சுக்கை உடலில் கலந்து விட்டால் உடல் நன்றாக இருக்கும். எந்தப்பிரச்சினைகளும் வராது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.