நாம் பயன்படுத்தும் பற்பசைகள் உடலுக்கு விசமா?

colgate_fluoride_warnings_usa

இந்த தலைப்பை படித்தவுடன் ஆச்சரியம் தான் படச் செய்யும். ஏனெனில் தினமும் காலையில் எழுந்து முதல் வேலையாக உடலுக்கு நன்மை என்று நாம் முதலில் செய்வது இந்த பல்துலக்குதல் தான் ஆனால் அதுவே உடலுக்கு தீங்கு தரும் என்றால் என்ன சொல்ல.

நாம் துலக்கும் பற்பசைகளில் நுரைகள் வரவும் பல்லை சுத்தமாக்கவும் சலவைப்பொருட்களில் உள்ள டிரைகுளோசான் என்ற வேதிவினைப்பொருள் உள்ளது.  இது உடனே விஷமாகாது நாளாக நாளாக தான் பிரச்சினை தரும்.  நாம் பல் துலக்கியப்பின்பு நன்றாக கொப்பளித்து துப்பிவிடுவதால் எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று நினைத்துவிடுகின்றோம்.  தப்பித்தவறி வயிற்றுக்குள் ஒரு விழுங்கு இறங்கட்டும்.  அன்று முதல் வயிற்றுப்போக்குதான்.

பெரியவர்களுக்கு பிரச்சினை இல்லை,  பாவம் இந்த சிறுகுழந்தைகளுக்கு காலையில் தூக்கத்தில் விழித்தவுடன் கையில் பிரஷ் மற்றும் வாயில் பேஸ்ட் என்று தான் விடிகின்றது. பற்பசைகளில், பற்பொடிகளில் டிரைகுளோசான் கலக்கப்படவில்லை என்றால் அது வாயிற்கு புத்துணர்வை தராது.  அதே சமயம் கிருமிகளும் கொள்ளப்படாது.

கனடா போன்ற நாடுகளில் நம் ஊரில் கோலேய்ச்சும் கோல்கேட் கூட அங்கு அனுமதி கிடையாது. ஆனால் நாம் பழைய தயாரிப்பு என்று அதையே வாங்குகின்றோம் பல் ஆய்வறிக்கைகள் இதை கூறியும் உள்ளன.

ஹார்மோன் மாற்றங்கள், சமநிலை அடைதல், புற்றுநோய்கட்டிகள் என்று இந்த விஷத்தால் பல பாதிப்புகள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றது.  இதற்கு ஒரே வழிதான் மூலிகை பேஸ்ட் அல்லது மூலிகை பற்பொடி ஆகியவற்றைக்கொண்டு இன்றே மாறிவிடுங்கள்.

வேம்பு குச்சு எல்லாவற்றையும் விட நல்லது.  குழந்தைகளுக்கு வேம்பு பயன்படுத்த முடியாது. அதனால் மூலிகை பற்பொடிகளை வாங்கி உபயோகப்படுத்தவும்.  இன்னொரு தொகுப்பில் மூலிகை பற்பொடி தயாரிப்பு பற்றி கூறுகின்றோம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.