தினமும் மூன்று பாதாம் பருப்புகள்

27e89cfd9e80a3b86733c86868b65c52

கடலை வகை உணவுகள் என்றாலே அதில் எண்ணெய்ச் சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கும் அந்த வகையில் வேர்க்கடலை, மொச்சை மற்றும் சோயா பீன்ஸ் போன்ற பருப்புவகைகளும் உடலுக்கு நன்மை தருபவை.

இந்த பாதாம் பருப்பு மற்ற அனைத்து பருப்புகளை விட உடலுக்கு சக்தி தருபவைகள். ஊட்டச்சத்து மிகுந்த இந்த பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு உடலுக்கு வலிமை கிடைக்கும். தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளில் அறிவு, உடல், அழகு அனைத்துக்கும் சக்திகள் பாதாம் பருப்பில் உள்ளது.  பாதாம் பருப்பு கலந்த பவுடர்களை விட நேரடியாக பாதாம் பருப்பை கொடுப்பது நன்று.

இதை நாம் தினமும் உட்கொள்வதால் நமக்கு இதயநோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.  இதய தசைகள் வலுவாகும். பாதாம் பருப்பினை தினமும் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறையும்.  உடல் பருமனாக உள்ளதும் குறையும். பற்கள் வலி ஏற்படுதல் பித்தப்பையில் ஏற்படும் கற்களும் மறையும்.

பெரியவர்கள் எனில் தினமும் ஐந்து பாதாம் பருப்பினை இரவு தூங்குமுன்பு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு பின்னர் காலையில் பல் துலக்கியப்பின்பு முதலில் உட்கொள்ளவேண்டும். நன்றாக வாயில் பால் ஊற மென்று அந்த பாலுடன் விழுங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அதிகமாக மூன்று போதும்.  வளர வளர அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும். ஒரு மாதத்தில் வித்தியாசம் காண்பீர்கள்.  சூப்பர் மார்க்கெட்களில் விலை அதிகம்.  கிராமப்புற சந்தைகளில் மிக மிக குறைவாக கிடைக்கும்.  வீட்டுக்கு முன் பாதாம் மரம் வைத்து தினமும் தண்ணீர் விட்டால் 2 வருடங்களுக்குள் வளர்ந்து காய்தரும்.  இந்த நலம் தரும் பாதாம் பருப்பை உண்டு வளம் பெற இப்புத்தாண்டில் அளவற்ற இன்பத்தோடும் செல்வத்தோடும் வாழ வாழ்த்துகின்றோம்.

-இந்தியாபீப்ஸ்-

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.