தடுமாற்றத்துடன் வானில் பறந்த ஏர் கனடா விமானம் கல்கரி நகரில் அவசரமாக தரையிறக்கம்

air canada

சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து கனடாவின் டொரண்டோ நகரிற்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் அவசர அவசரமாக கல்கரி நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

332 பயணிகள் மற்றும் 19 விமானக் குழுவினருடன் புறப்பட்ட ஏர் கனடா விமான நிறுவனத்தின் AC088 என்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் ஷாங்காய் நகரிலிருந்து புறப்பட்ட விமானம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தடுமாற்றத்துடனே வானில் பயணித்தது. இதனால் விமானத்தினுள் ஏற்பட்ட பயங்கர நடுக்கத்தின் காரணமாக விமானத்தின் இருக்கைகள் ஆடத் தொடங்கியதால், விமானத்தில் பயணித்த சுமார் 20 பயணிகள் காயமடைந்தனர்.

கனடாவின் கல்கரி நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.