வெள்ளரியின் வெள்ளியான பயன்கள்

Misc

கோடைகாலம் துவங்கு முன்பே வெள்ளரிக்காய் வளர ஆரம்பிக்கின்றது.   உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மற்றும் உடலுக்கு உஷ்ணத்தை தருபவைகளிடமிருந்து உடலை பாதுகாக்கவும் இந்த வெள்ளரிக்காயானது பயன்படுகின்றது.

வெள்ளரிக்காயை சாப்பிடுவது மட்டுமின்றி அவற்றை மேல் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம்.   வெள்ளரிக்காயை நன்றாக துண்டு துண்டுகளாக சிலைஸ் செய்து கண்களில் வைத்துக்கொண்டால் கண்கள் குளிர்ச்சியாகும்.

வெள்ளரிக்காயுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் பூசி குளித்தால் உடல் பளபளப்பாக மாறும். உடலில் வெப்பத்தால் உருவான கொப்புளங்கள் மறையும்.

வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து சாறாக்கி அதை கேஷத்தில் தடவி உலரவைத்து குளித்தால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து முடி நன்றாக வளரும்.

தினமும் வெள்ளரிப்பழம் சாப்பிட வேண்டாம் இது உடலுக்கு பித்தத்தை தரும்.  வெள்ளரிப்பழம் சாப்பிடும் போது அதை சர்க்கரை அல்லது தேனில் தொட்டு சாப்பிட வேண்டும்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.