தவசு முருங்கை இருந்தால் ஆஸ்துமா இருக்காதுங்க

Misc

தவசு முருங்கை என்ற செடியை  அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கின்றேன்.  சமையல் முருங்கை, கல்யாண முருங்கை கேள்விப்பட்டிருக்கின்றோம் அது என்ன தவசு முருங்கை என்றால் இது பெரிய மரமெல்லாம் கிடையாது, சாதரண கொடி போன்ற தாவரம்.  பூமியில் படர்ந்து வளரக்கூடியது.  இந்த தவசு முருங்கை.

வயதானவர்கள் மற்றம் நடுவயதுடையவர்களுக்கு இந்த ஆஸ்துமா நோய் எப்படியோ தொற்றிக்கொள்கின்றது.  இது மனிதனை பாடாய்ப் படுத்துகின்றது.  இதனால் மக்கள் பல பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.  ஒரு குடம் தண்ணீரை தூக்கி நடந்தால் கூட போதும் இளைப்பு வாங்கி விடுகின்றது.  இந்த மூச்சுத்திணறல்  ஏற்பட்டுவிடுகின்றது.

இதற்கு சரியான மூலிகை என்ற பங்கஜ கஸ்தூரியை வாங்கி வருட முழுக்க தின்று வந்தும் பலனளிக்க வில்லை என்றால் என்ன செய்ய?  மாற்றாக இந்த தவசு முருங்கை செடியை பயன்படுத்தலாம். தவசு முருங்கையின் தழையை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிடலாம்.  இதனால் மூச்சிரைப்பு நோய், இருமல் ஜலதோஷம் போன்ற நோய்கள் குணமாகும்.

வெட்டுக்காயம் மற்றும் புண்களின் மீது இந்த இலையை கசக்கி வைத்து கட்டு கட்டிவிட்டால் போதும்.  வெட்டுக்காயம் தானாக ஆறிவிடும். தவசுக்கீரையை அரைத்து சாறுபிழிந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் மறையும்.  பெண்களின் பிரசவத்திற்கு பிறகு மீதமுள்ள அழுக்குகள் கர்ப்பப்பையை விட்டு நீங்கும்.

குறிப்பு தவசி கீரை என்பது வேறு தவசு முருங்கை என்பது வேறு…..

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.