15 வயது பெண்ணுக்கு மேக் அப் அதிகம் என்பதால் அபராதம்

சஹ்ரா சாதிக் என்ற 15 வயது இளம்பெண் கடந்த வாரம் பர்மிங்காமில் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவருக்கு வயது 15 என்பதால் சிறுமிகளுக்கான பயணச்சீட்டில் சஹ்ரா சாதிக் பயணம் செய்துள்ளார்.
15 வயது சஹ்ரா சாதிக்கின் பயணச்சீட்டை வாங்கி பரிசோதித்த நடத்துனர், உன்னையும் உன் மேக் அப்பையும் பார்த்தால் உனக்கு 15 வயது போல் தெரியவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார். சஹ்ரா எவ்வளவு எடுத்துக்கூறியும் நடத்துனர் கேட்காமல் விடாப்பிடியாக 15 வயது சஹ்ரா சாதிக்கை நடுவழியில் இறக்கி விட்டு, அவருக்கு 35 பவுண்டு அபராதமும் விதித்தூள்ளார்.
15 வயது பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டு 35 பவுண்டு அபராதம் விதித்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.