தேமுதிக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் வரும் சனவரி 9 தேதி

download (3)
இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரு கின்ற 09.01.2016 [சனிக்கிழமை] காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜே.கே.மகால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.