ஜம்மு காஷ்மீர் முதல்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

download (2)

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீத் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான காய்ச்சல் மற்றும் நெஞ்சு வலி காரணமாக கடந்த 24 ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முஃப்தி முகமது சயீத்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் கூறினர்.  79 வயதான அவரின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அவர் சுயநினைவுடன் உள்ளார். மேலும், அவருக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். சிறப்பு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வரும் முஃப்தி முகமது சயீத்தை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.