வீட்டு உபயோக குறிப்புகள்

elumichai-kedaamal-kaayamal-irukka-tips+veettu-kurippugal

நாம் அன்றாடம் வீட்டில் செய்யும் வேலைகள்தான் என்றாலும் அதில் சிறப்பாக செய்ய நிறைய வழிகள் உண்டு அவைகள் தொகுக்கப்பட்டு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. டீத்தூளை வேண்டுமளவு எடுத்து முதல் நாள் இரவில் தூங்குமுன் அரைடம்ளர் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு.  அடுத்தநாள் அதை டீ வைக்கும் போது பாலுடன் கலக்கினால் நல்ல மனமாகவும், திடமாகவும், ருசியாகவும் இருக்கும்.

2. அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை அல்லது எலுமிச்சை கலந்த சோப்பில் தொட்டு துலக்கக் கூடாது.  அரிமானம் ஏற்படும்.  சாம்பலை தொட்டு துலக்கவேண்டும்.

3. ஒரு சிறுகரண்டி வினிகரில் மூன்று கரண்டி தண்ணீரை கலந்து ஜன்னலை துடைத்தால் போதுமானது.  ஜன்னல் பனிச்சிடும்.  துருக்கல் அண்டாது.

4. மாமிச உணவுகளை விரைவாக வேக வைக்க அதனுடன் சிறிது பப்பாளியை சேர்த்தால் போதும் கறி பூப் போல வெந்துவிடும்.

5. வெங்காயம் அரியும் போது கண் எரிச்சல் வருவது இயற்கைதான். ஆனால் வெங்காயத்தை நீரில் ஊறவைத்து அரியும் போது கண் எரிச்சல் வராது.  வெகுநேரம் அரிந்த வெங்காயம் வெளியில் இருக்கக் கூடாது உடனே சமைத்து விட வேண்டும்.

6. வெங்காயம் உரிக்கும் போது மெழுகுவர்த்தி அல்லது ஒரு விளக்கு பொருத்திக்கொண்டு அதன் முன் உரித்தால் வெங்காயத்தில் இருந்து வரும் வேதிப்பொருள் கண்களை தாக்காது.

7. கேஸ் ஸ்டவ்வை எளிதாக சுத்தம் செய்ய எலுமிச்சை பழத்தை ஒரு கப் வெந்நீரில் கலந்து ஸ்டவ்வின் மீது தெளித்துவிட்டு பின்னர் அழுத்தி துடைக்கவும்.  பளிச்சென்று கேஸ் ஸ்டவ் இருக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.