இளவயதினரையும் விட்டு வைக்கவில்லை இந்த மாரடைப்பு

Boy-wound-566245

இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இருதய பாதிப்புகள் வந்து விட்டது.  சென்ற காலங்களில் எல்லாம் அறுபதை கடந்தவர்கள் மாரடைப்பால் இறப்பார்கள், ஆனால் தற்போது இருபதுகளே மாரடைப்பு வந்து இறந்துவிடுகின்றார்கள்.

இதற்கு காரணம் உணவுமுறைகளும் உடல் முறைகளும் தான்.  சத்தான உணவுப்பொருட்களை மறந்துவிட்டு ருசிக்காகவும், வாசனைக்காகவும் சாப்பிட ஆரம்பித்தவுடன் இருதய பாதிப்புகளும் அதிகமாகிவிட்டது. உடல்பருமன் மற்றும் கொழுப்புகள் இரத்தக்குழாயை அடைத்துக்கொண்டால் இரத்தாம் சென்றுவரும் பாதை அடைபட்டு போகும் பிறகு இதயத்தில் அடைப்பு ஏற்படும்.  இதனால் இரத்தத்தை அதிக ஆழுத்தத்துடன் இரத்தத்தை தள்ளுவதற்கு இருதயம் அதிகமாக துடிக்க ஆரம்பிக்கும். இதனால் இதயம் பலவீனமடைந்துவிடும்.

நாட்கள் செல்ல கொழுப்பின் அளவு அதிகமாக அதிகமாக ஒரு கணத்தில் இதயம் பரிதாபமாக தன் வேலையை செய்யமுடியாமல் செயலிழந்துவிடுகின்றது.  இதயம் செயலிழந்த 5 நொடிகள் கூட நாம் வாழமுடியாது.

அதற்காக நாம் உணவை குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நமது தாத்தாக்கள் சாப்பிட்ட உணவில் பாதியைக் கூட நாம் சாப்பிடுவதில்லை.  அவர்கள் கூட கொழுப்பு நிறைந்த கடலை எண்ணை மற்றும் நல்லெண்ணெய் கொண்டுதான் சமைத்து திண்பண்டங்களை சாப்பிட்டார்கள்.  எவ்வளவு சாப்பிட்டார்களோ அவ்வளவையும் உழைத்து உடல்வருத்தி வந்த வியர்வையில் வெளியேற்றிவிட்டார்கள்.

நாம் இன்றைய காலத்தில் ஏசி அறையில் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.  நம் மேல் தவறில்லை நமது யுகம் இப்படி இருக்கின்றது.  ஆனால் உடற்பயிற்சி செய்யக்கூட நமக்கு நமக்கு நேரமில்லை.   உடற்பயிற்சி செய்தாவது கொழுப்புகளை குறைத்துவிடலாம்.

எந்த வித கடின வேலையும் செய்யாமல் உணவை மட்டும் சம்பாதிக்கின்றோம் சாப்பிடுகின்றோம் என்று பயப்படாமல் துரித உணவுகளையும், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டால் என்ன சொல்ல நமது ஆரோக்கியத்தைப்பற்றி?

இருதய வலி தொடர்ந்து மைதா மாவு உணவு உண்ணும் சிறுவயதினர்க்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.  உடற்பருமன் கொண்ட இளைய தலைமுறையினர்க்கும் வர வாய்ப்புகள் உண்டு.   எவ்வளவு சத்தான உணவுகள் உட்கொள்கின்றோமோ அவ்வளுவுக்கு உழைக்கவேண்டும்.  அல்லது உடற்பயிற்சியாவது செய்ய வேண்டும்.

படப்படப்பு மற்றும்  அதிக வியர்வை இருதய பிரச்சினைக்கு அறிகுறி.  நா வறண்டு போதல் திடீர் மயக்கம் வருவது, லேசாக இதயம் வலித்தல் இதெல்லாம் மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும்.  உடனே மருத்துவரை அணுகி ஆலோசிக்கவும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.