சளி இருமலா கருப்பட்டி கஷாயம் பருகுங்கள்

img1120922005_1_1 (1)

குளிர்காலம் என்று வந்து விட்டால் அவ்வளவு தான் எல்லாருடைய மூக்கிலும் சளி எப்படியாவது பிடித்துக்கொள்ளும்.  பாவம் குழந்தைகள் தான் மிகவும் அவதியுறுவார்கள்.  வயதானவர்களுக்கு இருமலும் வந்து வாட்டும்.   இதற்கு ஒரே ஒரு —-****———– மாத்திரையை வாயில் போட்டால் போதும் சரியாகிவிடும்,  என்று தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.   மருந்தும் பூசத் தேவையில்லை.

இயற்கையாக கஷாயம் வைத்துக் குடித்தால் போதுமானது. அந்த கஷாயம் செய்ய தேவையான மூலிகைகள்

1. 50 கிராம் பனைவெல்லம் ( கருப்பட்டி )

2. சுக்கு தேவைக்கேற்ப

3. மிளகு – 5 ( நன்றாக நசுக்கியது )

4. துளசி இலை-20

செய்முறை : 

200 மிலி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.  நன்றாக கொத்தித்தவுடன் அதில் சுக்கையும் மிளகையும் நன்றாக தூளாக்கி போடவும்.  பின் துளசி இலையை நன்றாக கசக்கி கொதிக்கும் வெந்நீரில் போடவும்.  பனைவெல்லத்தை தூளாக்கி கஷாயத்துடன் கலக்கவும்.

இந்த கசாயத்தை வடிகட்டி பருகவும்.  பருகும் போதே விக்கல் வரும் பயப்படவேண்டாம்.  மிளகு சளியை கரைத்துவிடும்.  இதனால் தொண்டை காயந்து விக்கல் வரும்.  உடனே சளி இருமல் சரியாகிவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.