வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு

download

தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக பெய்தது. இதனால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சில தினங்களுக்கு முன்னர் உருவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையயில், “நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

எந்த இடத்திலும் மழை அளவு ஒரு செ.மீட்டர் கூட பெய்யவில்லை. அதற்கு குறைவாகத்தான் பெய்துள்ளது.  இன்றும் , நாளையும் தென் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.  கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

மற்ற வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். ஒருசில நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். என்று கூறினார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாவல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.