தமிழகத்தை விட்டு சிம்பு வெளியேற வேண்டிய அவசியமில்லை: டி.ராஜேந்தர்

download

தமிழகத்தை விட்டோ, இந்தியாவை விட்டோ வெளியேற வேண்டிய அவசியம் சிம்புவுக்கு கிடையாது, அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை அவர் சட்டப்படி எதிர்கொள்வார் என்று லட்சிய திமுக தலைவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்திலுள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த டி.ராஜேந்தர் அங்கு சிறப்பு வழிபாடுகளிலும் ருத்ர யாகத்திலும் பங்கேற்றார். சுமார் 30 நிமிடங்கள் அவர் வழக்கறுத்தீஸ்வரரை வணங்கினார்.

இந்த வழிபாட்டுக்கு முன் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சிம்புவுக்கு எதிராக சிலர் சதி செய்ததன் விளைவாக, அவர் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளார். வாழ்க்கையில் நான் எப்போதும் மனமுடைவதில்லை. அதற்குக் காரணம், என்னை வாழ வைக்கும் தெய்வமும், தமிழ் மக்கள் எனக்கு பக்கபலமாக இருப்பதாலும் தான்.

இந்த விவகாரத்தில் சிம்புவின் ரசிகர்கள், ரசிகைகள் அவருக்கு பக்கபலமாக உள்ளனர். உஷா ராஜேந்தர் வெளியிட்ட விடியோ பதிவுக்குப் பிறகு பல்வேறு தாய்மார்கள், நடுநிலை தமிழ் அமைப்புகள் ஆகியோர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வர் கோயில், காமாட்சி அம்மன் கோயிலை தரிசிக்க இங்கு வந்துள்ளேன்.

சிம்பு எங்கும் சென்றுவிடவில்லை. அவர் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வார் என்று அவரது வழக்குரைஞர் கூறியுள்ளார். அவர் என்ன தீவிரவாதியா, தமிழ்நாட்டை விட்டோ, இந்தியாவை விட்டோ வெளியேறுவதற்கு? அத்தகைய அவசியம் இல்லை.

நான் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். அதனால் பல பிரச்னைகளைச் சந்தித்துள்ளேன். நானும் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு தான் வந்துள்ளேன் என்றார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.