தெலுங்கானா முதல் மந்திரி நடத்திய யாகத்தின் போது தீவிபத்து!!!

download

தெலுங்கான முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நடத்திய மகாயாகத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ரத்து செய்து விட்டார்.KCR-300x190

உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ், மேடக் மாவட்டம் எர்ரவல்லி என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் மிக பிரமாண்டமான யாகத்தை நடத்தினார்.

இந்த 5 நாள் மகா யாகம் கடந்த 23–ந்தேதி தொடங்கியது. இந்த மகா யாகத்திற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு அதில் பெரிய ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான புரோகிதர்கள் அக்னி வளர்த்து யாகத்தை நடத்தினார்கள். தினமும் ஏராளமானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.

இந்த யாகத்தில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இந்த யாகத்தில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மகாயாகத்தின் நிறைவு நாளான நேற்று யாகத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. யாக நிகழ்ச்சிக்கு வந்த ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடுவை மலர் கொத்து கொடுத்து தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் வரவேற்றார்.

இந்த நிலையில் நேற்று பகல் 1.30 மணி அளவில் திடீரென யாகசாலை கொட்டகையில் தீப்பிடித்தது. ஹோமகுண்டலத்தில் இருந்து தீப்பொறி பரவியதால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கு யாகம் நடத்திய புரோகிதர்கள் மற்றும் பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாகசாலையின் ஒருபகுதி மட்டும் சேதம் அடைந்தது. ஆனால் இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மகா யாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதைத்தொடர்ந்து இந்த யாகத்தில் பங்கேற்பதை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ரத்து செய்து விட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.