இரத்தப்பிரச்சினைகளை தீர்க்கும் பீட்ரூட் சாறு

images

இரத்த சிவப்பு நிறமுள்ள பீட்ரூட் காயானது நமது சமையல் பொறியல் செய்வதற்காக பயன்படுத்துவோம்.  இந்த பீட்ரூட்டை பொறியல் செய்து சாப்பிடுவதைவிட பீட்ரூட்டை சிறு துண்டுகளாக கட்செய்து பின் ஜூஸாக அரைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நல்லதை தரக்கூடியது.

இந்த சாறு இரத்தத்தில் நேரடியாக கலந்து இரத்தத்தை பெருக்குகின்றன. இரத்தசோகை குறைந்த இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் குணமாகின்றன். இரத்தம் குறைவாக உள்ளதால் ஏற்படும் மயக்கம், தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சினைகளை போக்க இந்த பீட்ரூட் சாறை குடிக்கவும்.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் இரத்த இழப்பினை சரிசெய்ய மூன்று நாளும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்.  இதனால் உடல் சோர்வு மற்றும் உடல் உபாதைகள் நீங்கிவிடும்.  மெனோபாஸ் பெண்களுக்கு நிற்கப்போகும் தருவாயில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு உடலில் இரத்தம் குறைந்துவிடும். இவர்கள் தினமும் பீட்ரூட் சாற்றினை குடிக்கவேண்டும்.

இரத்தப்புற்று நோயை வராமல் தவிர்க்க இந்த சாற்றினை வாரம் இருமுறை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.  இதனால் கல்லீரல் வலி, இரைப்பை வீக்கம் போன்ற வயிற்றுப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.  உடலுக்கு ஊக்கச்சக்தியை தரும்.  ஆனால், அதிக இரத்த கொதிப்பு உடையவர்கள் மருத்துவரை அலோசித்து பின் பருகவும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.