கெட்ட கொழுப்பை அகற்ற அவகோடா

download

வெண்ணெய்ப்பழம் ( Butter Fruit ) என்று அழைக்கப்படும் அவகோடா பழம் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடியது.  இந்த பழம் சற்று விலை அதிகமாகத்தான் இருக்கும் ஆனால் அதன் நற்குணங்கள் அதிகம் அதிக இனிப்புச்சுவையற்றது.  கொழுப்பு நிறைந்த இந்த பழம் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.  வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் தோன்றக்கூடியது.  இந்தப்பழம் தின்றால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்.  இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.

உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது.  செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும்.   இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.

கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம்.  அடுத்த முறை நீங்கள் மார்க்கெட்டில் பார்க்கும் போது மறக்காமல் வாங்கிவந்து  சாப்பிடுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.