இன்று வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் சென்னை போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

46206e10-1c0f-4122-bbae-c8337c21ef4f_S_secvpf

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அய்யாத்தேவர் என்பவருடைய மகள் தேவி (வயது 29). இவருக்கும் போடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. செந்தில்குமார் 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தேவி பெற்றோர் வீட்டில் வசித்துவந்தார்.

அவருக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது. அவரை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர். இதையடுத்து சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றும் மதுரை மாவட்டம் செக்கானூரணியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருடன் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

செல்வக்குமார் சென்னையிலும், தேவி புதுக்கோட்டையிலும் வேலை பார்த்து வந்தனர். தேவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தும் அவர் தேவியை பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது, மேலும் அவருக்கு சென்னையில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கம் இருப்பதாக தேவி, அவருடைய பெற்றோரிடம் கூறி உள்ளார்.

9 மாத கர்ப்பிணியான தேவிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வளைகாப்பு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவருடைய பெற்றோர் செய்துவந்தனர். ஆனால் இதில் செல்வக்குமார் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் வேதனை அடைந்த தேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேவியின் பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தேவி எழுதி வைத்திருந்த ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அதில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை காரணமா என்பது குறித்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.