ருசியாக ஆட்டுக்கறி சமைக்க தெரியவில்லை என மனைவியை எரித்து கொன்றவர் கைது

download

ஹைத்ராபாத்தில், ருசியாக ஆட்டுக்கறி சமைக்க தெரியவில்லை என மனைவியை எரித்து கொன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

ஹைதராபாத் அருகே உள்ள கடேடன் பகுதியில் வசித்து வரும் சங்கர் ராவ் என்பவர் கடந்த 20 ஆம் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சங்கருக்கு அவனது மனைவி சுலோச்சனா ஆட்டுக்கறியை பரிமாறியுள்ளார். அப்போது ஆட்டுக்கறி ருசியாக இல்லை என தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இதை சுலோச்சனாவின் அம்மாவும், அவரது சொந்த மகளும் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் போதை தலைக்கேறிய அந்த கொடுமைக்கார கணவன் மண்ணெண்ணெயை ஊற்றி தன் மனைவியை எரித்துள்ளான். அக்கம் பக்கத்தினரின் உதவியால் சுலோச்சனா உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து சங்கரைக் கைது செய்துள்ள போலீசார் அவனைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.