வாய் துர்நாற்றத்தைப் போக்க

bad-breath-image
பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி மற்றவர்களின் அருகில் பேச போகும் முன் சற்று யோசிப்பார்கள்.  நமது வாயில் கெட்ட வாடை அடிக்குமா நாம் எப்படி அவர்களிடம் பேசுவது என்று.  உண்மைதான் இதற்கு காரணம் நமது உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான்.
என்னதான் காலையில் 10 நிமிடம் பல் துலக்கிவிட்டு நாக்கை சுத்தம் செய்தாலும் எல்லாம் காலை உணவு முடியும் வரை தான்.  காலை உணவுக்கு பின் வாயில் துர்நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும்.  இந்த வாடையானது பற்களில் உள்ள கிருமிகளில் இருந்துதான் வருகின்றன.  நாம் சாப்பிடும் போது அந்த கிருமிகள் பற்களில் தொற்றிக்கொண்டு உடனே வளர ஆரம்பிக்கின்றன.
மீன், ஆடு, மாடு மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளில் அதிகமாக கிருமிகள் உள்ளதால் பற்களில் மற்றும் நாக்கின் சுவை உணரிகளில் தங்கி வாடையை உருவாக்குகின்றன. மேலும் இது வாயில் மட்டும் இருந்து வருவதில்லை வயிற்றில் இருந்தும் வருகின்றது.  வயிறு கெட்டுப்போனாலோ அல்லது அல்சர் மற்றும் அஜீரணம் ஏற்பட்டிருந்தாலோ வாயில் துர்நாற்றம் வீசும்.
ஏப்பம் மற்றும் கொட்டாவி விட்டாலும் துர்நாற்றம் அடிக்கும்.  பிராணவாயு கிடைக்காத சமயத்தில் வாயில் கிருமிகள் நன்றாக வளரும்.  வாயில் உள்ள உமிழ்நீர் கிருமிகளை கொல்லும் ஆனால் உமிழ்நீரின்றி வறண்டும் போது வாயில் துர்நாற்றம் அடிக்க ஆரம்பிக்கும். இதனால் அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.
ஒவ்வொருமுறை உணவுக்குப்பின்னரும் பற்பசையால் பல் துலக்குவது கடினம் தான். ஆனால் உணவு உண்டப்பின் வெறும் விரலால் கடவாய்ப்பற்களை துலக்க வேண்டும். நீரை கொப்பளித்து துப்பவேண்டும்.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாய்ப்பால் பருகும் குழந்தையின் வாயில் எவ்வித நாற்றமும் அடிக்காது.  அதன் காரணம் குழந்தையின் எளிய உணவுதான்.  நாம் இயற்கை உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
ஏலக்காய் மற்றும் சர்க்கரை கலக்காத மிட்டாய்களை வாயில் வைத்துக்கொள்ள வேண்டும்.  தண்ணீர் பருகிக்கொள்ள வேண்டும்.  ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை பல்லைக் கொப்பளித்து வாயை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.  இரவு உணவுக்குப்பின் பற்பசைக் கொண்டு வாயை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.   வாயில் சுவிங்கம் மெல்வது போன்று உள்ளது.
திறந்திருக்கும் வாயினைவிட மூடிய வாயில் பிராணவாயு குறைாவாக இருப்பதால் அதிகமாக கிருமிகள் வளர்கின்றன. எனவே எப்போதும் வாயினை மூடியே வைத்திருக்காமல் கல கல வென்று பேசவேண்டும். காலையில் துளசி இலையை பறித்து வாயில் மென்று விட்டால் போதும் கிருமிகள் அழிந்து விடும்.  வாயும் துளசியைப்போன்று மணக்கும். வேம்பு குச்சியைக் கொண்டு நன்றாக பல்லை துலக்கினால் எந்த கிருமியும் வாயில் வராது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.