துறையூரில் திருமணமான புதுப்பெண் தீக்குளித்து இறந்தார்

images

துறையூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார். புலிவலத்தையடுத்த மூவானூர் எடத்தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ் (26). ஜேசிபி டிரைவர். இவருக்கும் குளித்தலை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த நந்தினி(22) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி மீது சந்தேகப்பட்டு ரெங்கராஜ் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது, நந்தினியை திட்டிவிட்டு ரெங்கராஜ் வெளியே சென்றுவிட்டார்.

வேதனையில் இருந்த நந்தினி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அருகில் உள்ளவர்கள் அவரை அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நீதிபதி சரண்யாவிடம் வாக்குமூலம் அளித்த பின் சிகிச்சை பலனின்றி நந்தினி இறந்தார்.

திருமணமாகி 4 மாதங்களே ஆனதால் திருச்சி ஆர்டிஓ கணேஷ்குமார் விசாரணை செய்தார். விசாரணையில் நந்தினியின் தற்கொலைக்கு கணவன் ரெங்கராஜ்தான் காரணம் என தெரியவந்தது. ஆர்டிஓ உத்தரவுபடி மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் காட்வின் ஜெகதீஷ்குமார் வழக்குபதிவு செய்து ரெங்கராஜை கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.