சவூதி அரேபிய மருத்துவமனையில் தீவிபத்து 25 பேர் உயிரிழந்தார்கள்

7053526-3x2-700x467

சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

ஜஸான் பகுதியில் அமைந்து உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு அமைந்துஉள்ள முதல் மாடியில் விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்தில் 25 பேர் பலியாகினர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் தீ விபத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பான முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை…

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.