ஒற்றை தலைவலி குணமாக

ottrai-thalivali-neenga

அதிக வேலைப்பளு மற்றும் நோன்பிருப்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தால் தத்தளிப்பவர்களுக்கு தலைவலி வருவது எளிதானது. ஆனால் இரண்டு பக்கமும் தலைவலி வந்து கவலைப்படுபவர்களில் இந்த ஒற்றைத் தலைவலி வந்து கவலைப்படுபவர்கள் தான் அதிகம்.

இது உடலில் உள்ள சத்துக் குறைபாட்டால் தோன்றுவது.  இந்த ஒற்றை தலைவலியை நீக்க கேரட் மற்றும் பீட்ருட் சாற்றினை குடிக்க வேண்டும்.  இந்த சாறு நம் உடலில் கலந்து வலியை உண்டாக்குகின்ற பிரச்சினைகளை சரிசெய்து விடுகின்றது.

இந்த ஒற்றைத்தலைவலியால் வாந்திபேதி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஆகியவைகள் வந்து துன்புறுத்தும்.  இவ்வாறு வாந்தி வரும் நிலை ஏற்பட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து குடிக்க வேண்டும்.  இதனால் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுவது குறையும்.

தினமும் தலைவலியை விரட்ட மாத்திரைகளை விழுங்கினால் பழக்கமாகிவிடும். அதனால் இயற்கை முறையில் தலைவலியை விரட்டி விடுங்கள்!!

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.