கண்கட்டியா கவலையை விடுங்க

phototake_rm_photo_of_infected_sty

இந்த வெயில்காலம் வந்து விட்டால் போதும் தலைவலி, கண்வலி, கண்ணெரிச்சல், கண்கட்டி எல்லாம் வந்துவிடுகின்றது.  நாம் வெயிலில் அலையும் போது தூசுக்கள், மாசுக்கள் ஆகியவை கண்களில் ஒட்டிக்கொள்கின்றன.  இந்த தூசு மாசுக்களை கண்கள் சுரக்கும் நீரால் வெளியேற்றப்படுகின்றன.   ஆனால் அதிகமாக வெயிலில் அலைவதால் கண் வறண்டுவிடும் இதனால் கண் தூசு அகற்றப்படாமல் எரிச்சல் மற்றும் கண்கட்டி வந்துவிடும்.

கண்கட்டி வரும் வரையில் அதன் வலி தெரியாது, வந்து விட்டால் தான் வலி தெரியும்.  முதலில் கண்ணை குளிர்ச்சியாக்க வேண்டும்.  கண்கட்டியின் மீது சுண்ணாம்பு வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடனே கட்டி சரியாகிவிடும்.

கற்றாழையை எடுத்து கண்களின் மேல் வைக்க வேண்டும்.  இந்த கண்வலி ஆகியவை சரியாகிவிடும்.

கண்களில் எண்ணெய் கட்டினாலும் கண்ணெரிச்சல் நீங்கி விடும்.  வெளியில் செல்லும் போது தலையில் எண்ணை வைத்து விட்டு சென்றால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.