பஸ் டிரைவரின் தூக்க கலக்கத்தால் 400 கோடி ரூபாய் இழப்பு

ai_story_647_122215083534

கொல்கத்தா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது பஸ் மோதியதில் ரூ. 400 கோடி மதிப்புள்ள விமானம் சேதம் அடைந்தது.

இன்று காலை 5.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை விமானத்தில் ஏற்றி இறக்க அழைத்து செல்லப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தை ஓட்டி வந்த, மொயின் அலி என்ற ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் அசாம் மாநிலம் சில்ச்சாருக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தின் இடதுபுற இறக்கை மீது மோதி விட்டதாக தெரிகிறது.

இதில் விமானத்தின் என்ஜின் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மொயின் அலி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. மருத்துவ பரிசோதனையில் பேருந்து ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.