குப்பையில் வளரும் குப்பைமேனியின் நற்குணங்கள்

images

குப்பைமேனி அனைத்து கிராமங்களிலும் சாலையோர மணற்பாங்கான மேடுகளிலும் வீட்டுக் குப்பைகள் கொட்டப்படும் இடங்களிலும் பரவலாக இவற்றைப்பார்க்கலாம்.  இந்த குப்பைமேனி செடிகளின் இலைகளே மலர்களாக சுருள் சுருளாக காணப்படும்.  குப்பையில் வளருவதால் குப்பை மேனி என்று பெயர் வரக்காரணம். இருந்தாலும் இதன் பயன்கள் கோபுரத்தையும் தாண்டும்.

இந்த குப்பைமேனியானது பற்களில் தோன்றும் வலிகள், சீழ் வடிதல் சொத்தைப்பல் ஆகியவற்றை நீக்கும். தீக்காயங்கள், வயிற்றுவலி, வாயுப்பிரச்சினைகள், மூலம், நமைச்சல், கோழைச்சளி, மூக்கில் நீர் வடிந்து கொண்டே இருப்பது போன்ற நோய்களை சரிசெய்யக்கூடியது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிற்றில் புழு ஏற்படும்.  மலம் வழியே புழுக்கள் வருவது தென்பட்டால் வயிற்றில் பூச்சுக்கள் வந்துவிட்டது என்று அர்த்தம். உடனே குப்பைமேனி இலைகளை நிழலில் காயவைத்து பொடித்து ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.  குழந்தைகளுக்கு தேனில் உருண்டை பிடித்து விழுங்க சொல்லலாம்.  புழுக்கள் மலம் வழியே வெளியே வந்துவிடும்.

பெரியவர்கள் குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து சாறுபிழிந்து 50 மிலி குடித்தால் உடனே வயிற்றுப்பூச்சுக்கள் இறந்து வெளியேறும்.

சுவாசப்பிரச்சினைகள் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை மேற்சொன்னபடி பொடி செய்து தினமும் சாப்பிட்டு வரவும்.  இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடனே சுவாசப்பிரச்சினைகள் நீங்கிவிடும்.

குப்பைமேனி இலையை அரைத்து உடல் எங்கும் பூசிவிட்டு உலர்ந்தபின்பு குளித்தால் போதும் உடலில் உள்ள சொறி சிரங்கு மற்றும் புண்கள் நீங்கிவிடும். மேனியும் பளபளப்பாக இருக்கும்.

குப்பைமேனி வேரை எடுத்து தினமும் அரைத்து அவற்றைப் பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் தயாரித்து அருந்த வேண்டும்.  இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

குப்பையில் வளர்ந்தாலும் குப்பைமேனியின் குணங்கள் அதிகம் இனிமேல் அவற்றைப்பார்த்தால் ஒரு செடியை வீட்டுக்கு எடுத்துவந்து நட்டு வையுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.