முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியில் இது வரை 160 கோடி நிவாரணம் தொகை சேர்ந்துள்ளது

download

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161.30 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவிடம் பொது நிவாரண நிதிக்கு ரூ.16.35 கோடி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது நிவாரண நிதிக்கு சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் எஸ்.விஜி, நிர்வாக இயக்குநர் டி.டி.சீனிவாசராகவன் ஆகியோர் ரூ.3.35 கோடியையும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர்-நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஆச்சார்யா ரூ.2.5 கோடியையும், டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ், ஸ்ரீசக்ரா டயர்ஸ் நிறுவன இயக்குநர் பி.விஜயராகவன் ஆகியோர் ரூ.2.5 கோடியையும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத் தலைவர் மிலிந்த் ஏ காரத், ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் அன்ஷு புத்ராஜா ஆகியோர் தலா ரூ.2 கோடியைம் வழங்கினர்.

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சார்பிலும்..: டால்மியா நிறுவனத் துணை நிர்வாக இயக்குநர் டி.வெங்கடேசன் மற்றும் துணை செயல் இயக்குநர் பி.சுந்தரராஜன், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் சரோஜ் கோயங்கா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யு-நியூஸ் பேப்பர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கவிதா சிங்கானியா ஆகியோரும், கேஏஎல்எஸ் டிஸ்டலரீஸ் பிரைவேட் நிறுவனத் தலைவர்-நிர்வாக இயக்குநர் எஸ்.வாசுதேவன், போத்தீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் தலா ரூ.1 கோடியையும் அளித்தனர்.

மொத்தம் ரூ.161.30 கோடி: நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.161 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.